Wednesday, September 29, 2010

நீ அழைக்க மாட்டாய் என்று தெரிந்தும்
அழைக்கும் அலைபேசியை எடுக்க நினைக்கிறேன்
அழைப்பது நீ தான் என்று
நீ என் அன்பை மறுத்த போதிலும்


இன்னும் நேசித்து கொண்டு தான் இருக்கிறேன்


நீ என்னை மறக்க வில்லை என்கிற நினைவில்
சிறு சிறு தீண்டல்கள்

என்னை சிலிர்க்க வைத்த உன் முத்தங்கள்

சின்ன சின்ன பரிமாற்றங்கள்

சொல்லாமல் பேசிய வார்த்தைகள்

நினைத்து பார்த்து வேதனை படுகின்றேன்

நீ என்னை விட்டு விலகி இருக்கும் இந்த நாட்களில்

திரும்பி வருவாய் என்று காத்திருக்கிறேன்

இது எதுவும் மீண்டும் நடக்காது என்று தெரிந்தும்
படித்ததில் பிடித்தது

நல்ல காதலை வாழ விடாததினால்

இன்று

கள்ளக் காதல் பெருகி விட்டது